காரைக்காலில் கார்னிவல் நடத்துவது குறித்து அமைச்சர் திருமுருகன் தலைமையில் ஆலோசனைக்கூட்டம்..
காரைக்கால் மாவட்ட நிர்வாக அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு அமைச்சர் திருமுருகன் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.,க்கள் நாஜிம், நாகதியாகராஜன், கலெக்டர் மணிகண்டன் முன்னிலை வகித்தனர். அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் வரும் ஜனவரி மாதம் கார்னிவல் -2025யை வெகு விமர்சியாக நடத்துவது குறித்தும், இதற்காக ஒருங்கிணைப்பு குழு அமைப்பது, பொழுது போக்கு நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள் நடத்துவது, பொதுமக்கள் வந்து செல்ல போக்குவரத்து வசதி மற்றும் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்தில் சீனியர் எஸ்.பி., லட்சுமி சவுசன்யா, கட்டுப்பாட்டுதுறை இயக்குனர் கலியபெருமாள், சுற்றுலாத்துறை இயக்குனர் முரளிதரன், துணை ஆட்சியர் அர்ஜுன் ராமகிருஷ்ணன், உள்ளாட்சித்துறை துணை இயக்குனர் சுபாஷ் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
No comments